உள்ளடக்கத்துக்குச் செல்

சினேகதீரம் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகதீரம் கடற்கரையின் நுழைவாயில்

ஸ்னேகதீரம் கடற்கரை அல்லது காதல் கரை (Snehatheeram Beach அல்லது Love Shore) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில், உள்ள திருச்சூர் மாவட்டத்தின் தளிகுளத்தில் உள்ள ஒரு கடற்கரை ஆகும். இது அரபிக் கடலின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு பருவ காலத்திலும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. 2010 ஆம் ஆண்டில் கேரள சுற்றுலாத்துறையால் இந்த கடற்கரை சிறந்த கடற்கரை சுற்றுலாத் தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த கடற்கரையை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. [1]

வசதிகள்

[தொகு]

இந்தக் கடற்கரைக்கு அருகில் அனைத்து வசதிகளுடன்கூடிய குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது. பூங்காவிற்கான நுழைவு கட்டணம் வயது வந்தோருக்கு ரூ .10 மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 5 ஆகும். இங்கு கடல் உயிரினக் காட்சியகம், நன்கு பராமரிக்கப்படும் பூங்கா, நடைபாதைகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. திருச்சூரின் கடல் உணவை உண்பதற்கு நாலுக்கெட்டு என்ற உணவகம் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ளது. [2] [3] [4]

குறிப்புகள்

[தொகு]
  1. "A virgin beach called Love Shore". Deccan Chronicle. Archived from the original on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
  2. "A virgin beach called Love Shore". Deccan Chronicle. Archived from the original on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
  3. "SNEHATHEERAM BEACH, THALIKKULAM". Thrissur, Kerala. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
  4. "Snehatheeram Beach". Elatrip. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.