சீத்தல் ஆம்தே
சீத்தல் ஆம்தே Sheetal Amte | |
---|---|
பிறப்பு | வரோரா, மகாராட்டிரம் | 26 சனவரி 1981
இறப்பு | (அகவை 39) சந்திரபூர், மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | மருத்துவம் இளநிலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி |
பணி | மருத்துவர், பொது சுகாதார நிபுணர், சமூகப் பணியாளர் |
அறியப்படுவது | வதோரா மகாரோகி சேவா சமிதி தலைமை அதிகாரி |
வாழ்க்கைத் துணை | கௌதம் காரச்கி |
பிள்ளைகள் | சார்வில் காரச்கி |
வலைத்தளம் | |
www.sheetalamtekarajgi.com |
சீத்தல் ஆம்தே (Sheetal Amte) இந்தியாவைச் சேர்ந்த பொது சுகாதார வல்லுநர் ஆவார். 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு இவரது பெயர் சீத்தல் ஆம்தே-காரச்கி என்று அறியப்படுகிறது. இயலாமை நோயாளிகளின் சிறப்பு நிபுணராகவும் சமூக தொழிலதிபராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்ற மகாரோகி என்ற சேவா சமிதியின் இலாப நோக்கற்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் குழு உறுப்பினராகவும் இருந்தார். [1] [2] </ref>
வாழ்க்கை
[தொகு]விகாசு ஆம்தே மற்றும் பாரதி ஆம்தே தம்பதியர்களுக்கு மகளாக சீத்தல் ஆம்தே பிறந்தார். இந்திய சமூகப் பணியாளர் பாபா ஆம்தேவின் பேத்தியாகவும் இவர் அறியப்படுகிறார். மகாராட்டிரா மாநிலத்தில் ஆனந்தவானில் தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லத்தை நிறுவி, அவ்வளாகத்தில் இவர் தங்கி சேவை செய்தார்.[3] மகாரோகி சேவா சமிதி என்ற ஓர் அமைப்பையும் வதோர்ராவில் நிறுவினார். மேலும் இவ்வமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாரிய உறுப்பினராகவும் இருந்தார், சுகாதார பராமரிப்பு, மறுவாழ்வு, கல்வி, விவசாயம் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் திட்டங்கள் போன்ற வசதிகளை அளிப்பதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.[4] [5] மகரோகி சேவா சமிதி ஆயிரக்கணக்கான ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார திறன்களை உருவாக்க உதவியது, குறிப்பாக தொழுநோய், எலும்பியல் ஊனமுற்றோர், பார்வை மற்றும் காது கேளாமை மற்றும் பழமையான பழங்குடியின மக்கள் மத்திய இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான சந்திரப்பூரில் 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. . [6]
ஆம்தே மருத்துவம் படித்து ஒரு மருத்துவரானார் [6] மேலும் சமூக தொழில் முனைவோர் [3] பட்டத்தையும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்திலிருந்து பெற்றார். [6] தனது தாத்தாவின் தொலைநோக்குப் பார்வையை தொடர ஆனந்த்வானில் பணிபுரியும் தனது குடும்பத்தில் சேர்ந்தார் [6] ; இவரது சகோதரர் கவுசுதுப் ஆனந்த்வானுக்கு கணக்காளராகவும், மாமா பிரகாசு ஆம்தே மற்றும் அத்தை மந்தாகினி ஆம்தே ஆகியோரும் இச்சமூகத்தில் மருத்துவர்களாக இருந்தார்கள். [7] [8] ஆர்வார்டு கென்னடி பள்ளியில் தலைமைத்துவத்தையும் இவர் படித்தார். [3]
ஆனந்த்வான் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்க டெக் மகிந்திரா அறக்கட்டளையின் நிதி உதவியைப் பெற இவர் உதவினார். [9] இவர் சார்ந்திருந்த அமைப்பில் சூரிய சக்தி பலகைகளை நிறுவினார். [6] மகாரோகி சேவா சமிதி அமைப்புக்கு இதன் விளைவாக 2016 ஆம் ஆண்டுக்கான புதுமையான சக்தி திட்ட ஒரு விருது கிடைத்தது. சக்தி பொறியாளர்கள் சங்கம் இவ்விருதை வழங்கியது. மேலும் எதிர்காலத்தில் இச் சமூகத்தில் கூடுதல் சிறப்பான தொழில்நுட்பங்களை இணைத்துக்கொள்ளவும் உதவி செய்தது. [6] [10]
2016 ஆம் ஆண்டில், உலக பொருளாதார மன்றத்தால் ஆம்தே இளம் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டார். மனிதாபிமான செயல்பாடுகளுக்காக உலக பொருளாதார மன்ற நிபுணர் வலையமைப்பின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] ஐக்கிய நாடுகளின் கண்டுபிடிப்பு தூதராகவும், அமைதிக்கான கண்டுபிடிப்புகள் குழுவின் ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] உலக கண்டுபிடிப்பு அமைப்பின் ஒரு உறுப்பினராக சீத்தல் ஆம்தே பணிபுரிந்தார், இது புதுமை மற்றும் ஐக்கிய நாடுகள் பற்றிய உலக உச்சிமாநாட்டின் முயற்சியாகும். [6] 2016 ஆம் ஆண்டில் ரோட்டரி தொழிற்துறை சிறப்பு விருது ஆம்தேவுக்கு வழங்கப்பட்டது. [6]
30 நவம்பர் 2020 அன்று ஆம்தே தற்கொலை செய்து கொண்டார். [12] ஒரு ஓவியராகவும் இருந்த ஆம்தே கணவர் கௌதம் கராச்கி மற்றும் ஏழு வயது மகன் சர்வில் ஆகியோருடன் வாழ்ந்தார். .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rao, Madhu (30 November 2020). "Sheetal Amte, granddaughter of Baba Amte, dies by suicide in Maharashtra's Chandrapur" (in en). www.indiatvnews.com. https://www.indiatvnews.com/news/india/sheetal-amte-baba-suicide-baba-amte-granddaughter-dies-maharashtra-chandrapur-668341.
- ↑ "Four Indians figure in WEF's Young Global Leaders Class of 2016". 16 March 2016. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/four-indians-figure-in-wefs-young-global-leaders-class-of-2016/articleshow/51428091.cms.
- ↑ 3.0 3.1 3.2 "Family tree of Baba Amte: Sons Prakash and Vikas Amte; who was Sheetal Amte and her role at Anandwan" (in en). www.timesnownews.com. https://www.timesnownews.com/india/article/family-tree-of-baba-amte-sons-prakash-and-vikas-amte-who-was-sheetal-amte-and-her-role-at-anandwan/689042.Pandey, Kirti (1 December 2020). "Family tree of Baba Amte: Sons Prakash and Vikas Amte; who was Sheetal Amte and her role at Anandwan". www.timesnownews.com. Retrieved 5 March 2021.
- ↑ Palmer, Joanna; Mullan, Zoë (December 2016). "Highlights 2016: moving pictures" (in en). The Lancet 388 (10063): 2975–2988. doi:10.1016/S0140-6736(16)32532-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(16)32532-6/fulltext?code=lancet-site.
- ↑ "Dr. Sheetal Amte, Baba Amte's daughter shares her story today". sheroes.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 "Not just Baba Amte's granddaughter: From Anandwan to WEF's Young Global Leader, journey of Dr Sheetal Amte". Free Press Journal."Not just Baba Amte's granddaughter: From Anandwan to WEF's Young Global Leader, journey of Dr Sheetal Amte". Free Press Journal. Retrieved 5 March 2021.
- ↑ "A New Generation Takes Up Baba Amte's Torch – OpEd" (in en-US). https://www.eurasiareview.com/26052018-a-new-generation-takes-up-baba-amtes-torch-oped/."A New Generation Takes Up Baba Amte's Torch – OpEd". Eurasia Review. 26 May 2018. Retrieved 29 May 2018.
- ↑ Indian public health expert,Dr Sheetal Amte reportedly dies
- ↑ Khanna, Vinod (2015). Making Dreams Come True: The Story of the Tech Mahindra Foundation. Penguin.
- ↑ "International award for Anandwan's solar energy use – Times of India".
- ↑ "Stories, Ideas and Perspectives | 300+ Inspirational talks by remarkable people from INK events -". www.inktalks.com. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
- ↑ Joshi, Sahil (30 November 2020). "Baba Amte's granddaughter Sheetal Amte dies by suicide, weeks after public spat over family trust". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.