தவக்குல் கர்மான்
தவக்குல் கர்மான் | |
---|---|
பிறப்பு | 7 பெப்ரவரி 1979 யேமன் |
தேசியம் | யேமன் |
பணி | மனித உரிமை ஆர்வலர் ,[1] இதழியலாளர், அரசியல்வாதி[2] |
விருதுகள் | 2011 அமைதிக்கான நோபல் பரிசு |
தவக்குல் கர்மான் (Tawakul Karman[1] (அரபு மொழி: توكل كرمان), ஓர் யேமன் பெண் அரசியல்வாதி ஆவார். கர்மன் யேமனின் முதன்மை எதிர்கட்சியான அல்-இசுலாவின் மூத்த அங்கத்தினராவார்.[2] இவர் 2005ஆம் ஆண்டு சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறார்..[1]
எல்லன் ஜான்சன் சர்லீஃப் மற்றும் லேமா குபோவீயோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.[3]
2011 போராட்டம்
[தொகு]தற்போது நடைபெற்றுவரும் யேமனியப் புரட்சியின் போது தவகேல் கர்மன் அலி அப்துல்லா சாலே யின் அரசுக்கெதிராக மாணவர்களின் பேரணியை சனாவில் ஒருங்கமைத்தார். அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற கணவரின் புகார்களுக்கிடையே, 24 சனவரியன்று பிணையம் பெற்று வெளியே வந்தார். 28 சனவரி அன்று மீண்டும் ஓ்ர் போராட்டத்திற்கு தலைமையேற்று பெப்ரவரி 3 நாளை "பெருங்கோப நாள்" என அறிவித்தார்.[2] மீண்டும் மார்ச்சு 17 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Al-Sakkaf, Nadia (2010-06-17). "Renowned activist and press freedom advocate Tawakul Karman to the Yemen Times: "A day will come when all human rights violators pay for what they did to Yemen"". Women Journalists Without Chains. Archived from the original on 2011-01-30. பார்க்கப்பட்ட நாள் 2011-01-30.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 2.0 2.1 2.2 "New protests erupt in Yemen". Al Jazeera. 2011-01-29 இம் மூலத்தில் இருந்து 2011-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5w8S9MZ1r?url=http://english.aljazeera.net/news/middleeast/2011/01/2011129112626339573.html. பார்த்த நாள்: 2011-01-30.
- ↑ "The Nobel Peace Prize 2011 – Press Release". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
- ↑ http://www.guardian.co.uk/world/2011/jan/23/yemen-arrests-protest-leader