துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1996
நிகழ்வு | 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
நாள் | 17 மார்ச், 1996 | ||||||
அரங்கம் | கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான் | ||||||
ஆட்ட நாயகன் | அரவிந்த டி சில்வா | ||||||
தொடர் ஆட்ட நாயகன் | சனத் ஜயசூரிய | ||||||
நடுவர்கள் | ஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட் | ||||||
← 1992 1999 → |
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1996 (1996 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1996) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஆறாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியாகும். இப்போட்டி 1996 மார்ச் 17 ஆம் நாள் பாக்கித்தானின் கடாபி அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி மார்க் டெய்லர் தலைமையிலான ஆத்திரேலிய அணியை 7 இழப்புகளால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
நடுவர்கள்
[தொகு]இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், தொலைக்காட்சி நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சி. ஜே. மிச்சலேயும் பணியாற்றினர். சி. எச். லொயிட் ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார்.
அணிகள்
[தொகு]இலங்கை
[தொகு]இலங்கை அணியின் தலைவராக அர்ஜூன றணதுங்கவும், துணைத் தலைவராக அரவிந்த டி சில்வாவும் ரொமேஷ் களுவிதாரண குச்சக்காப்பாளராகவும் பணியாற்றினர். இவர்களுடன் சனத் ஜயசூரிய, அசங்க குருசிங்க, எச். பி. திலகரத்ன, ரொஷான் மகாநாம, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், எச். டி. பி. கே. தர்மசேன, ஜி. பி. விக்கிரமசிங்க ஆகியோரும் அணியின் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஆஸ்திரேலியா
[தொகு]ஆஸ்திரேலிய அணியில் அணித்தலைவராக மார்க் டெய்லரும், குச்சக்காப்பாளராகஐ. ஏ. ஹீலியும் பணியாற்றினர். மார்க் வோ, ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வா, ஷேன் வோர்ன், எஸ். ஜி. லா, எம். ஜி. பெவன், பி. ஆர். ரீபெல், டி. டபிள்யூ. பிளெமிங், கிளென் மெக்ரா ஆகியோர் ஏனைய அணி உறுப்பினர்கள்.
ஆட்டம்
[தொகு] 17 மார்ச் 1996
ஆட்டவிபரம் |
எ
|
||
மார்க் டெய்லர் 74 (83)
அரவிந்த டி சில்வா 3/42 (9 நிறைவுகள்) |
அரவிந்த டி சில்வா 107 (124)
டேமியன் பிளமிங்கு 1/43 (6 நிறைவுகள்) |
நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் மட்டையாடக் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 நிறைவுகளில் 7 இழப்புகளுக்கு 241 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி, 46.2 நிறைவுகளில் மூன்று இழப்புகளுக்கு 245 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துடுப்பாட்ட விபரம்
[தொகு]ஆஸ்திரேலியா
[தொகு]வீரர் | ஆட்டமிழப்பு விபரம் | ஓட்டங்கள் | |
---|---|---|---|
மார்க் டெய்லர் | பிடி: ஜயசூரியா | பந்து: டி சில்வா | 74 |
மார்க் வோ | பிடி: ஜயசூரியா | பந்து: வாஸ் | 12 |
ரிக்கி பொண்டிங் | பந்து: டி சில்வா | 45 | |
ஸ்டீவ் வோ | பிடி: டி சில்வா | பந்து: தர்மசேன | 13 |
ஷேன் வார்ன் | ஸ்டம்ப்: களுவிதாரண | பந்து:முரளீதரன் | 2 |
எஸ். ஜி. லா | பிடி: டி சில்வா | பந்து: ஜயசூரியா | 22 |
எம். ஜி. பெவன் | ஆட்டமிழக்கவில்லை | 36 | |
ஐ. ஏ. ஹீலி | பந்து: டி சில்வா | 2 | |
பி. ஆர். ரீபெல் | ஆட்டமிழக்கவில்லை | 13 | |
உதிரிகள் | 22 | ||
மொத்தம் | 241 |
இலங்கை
[தொகு]வீரர் | ஆட்டமிழப்பு விபரம் | ஓட்டங்கள் | |
---|---|---|---|
சனத் ஜயசூரியா | ஓட்ட ஆட்டமிழப்பு | 9 | |
களுவிதாரண | பிடி: பெவன் | பந்து: பிளெமிங் | 6 |
அசங்க குருசிங்க | பந்து: ரீபெல் | 65 | |
அரவிந்த டி சில்வா | ஆட்டமிழக்கவில்லை | 107 | |
அர்ஜுன ரணதுங்க | ஆட்டமிழக்கவில்லை | 47 | |
உதிரிகள் | 11 | ||
மொத்தம் | 245 |
உசாத்துணைகள்
[தொகு]- "கிரிக்கின்ஃபோ (Cricinfo) இணையத் தளத்திலிருந்து". பார்க்கப்பட்ட நாள் 2007-04-27.