நமிதா கபூர் (நடிகை)
நமிதா | |
---|---|
இயற் பெயர் | நமிதா முக்கேஷ் வன்கவாலா[1] |
பிறப்பு | மே 10, 1981 |
வேறு பெயர் | நமிதா கபூர், பைரவி |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | (2002-2017) |
துணைவர் | வீரேந்திர சௌத்ரி (2017-தற்போது வரை) |
நமிதா (ஆங்கில மொழி: Namitha, பிறப்பு:மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு காதல் திரைப்படமான "சொந்தம்" (2002) மூலம் அறிமுகமானதற்கு முன்பு, மிஸ் இந்தியா 2001 போட்டியில் பங்கேற்றார்
நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
2000 களின் நடுப்பகுதியில், அவர் தமிழ் படங்களில் கவர்ச்சியான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். மேலும் பெரும்பாலும் பழைய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தசாப்தத்தின் முடிவில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் இருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து வழிபாட்டு முறை போன்ற ரசிகர்களைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு முதல், இவர் நடித்தத் திரைப்படங்கள் தோல்வியிலேயே முடிந்தது. திரையுலகு நமீதாவைத் தவிர்த்தது. பின்னர், திரல்ப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றவும், அவரது ரசிகர்கள் அவரைத் தவிர்க்கவும் தூண்டியது.
தொழில்
[தொகு]2001—2008
[தொகு]அழகுப் போட்டியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நமீதா 1998 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் மிஸ் சூரத் முடிசூட்டப்பட்டார். அவர் 2001 மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று நான்காவது போட்டியாளாராக வர முடிந்தது, அதே நேரத்தில் "செலினா ஜெயிட்லி" யிடமிருந்து "மிஸ் இந்தியா" என்ற பட்டம் முடிசூடினார் [2] போட்டியின் போது அவர் பெற்ற புகழ் மும்பைக்கு செல்லத் தூண்டியது, பின்னர் அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் "ஹிமானி கிரீம்" மற்றும் "ஹேண்ட் சோப்", " அருண் ஐஸ் கிரீம்", "மாணிக்கந்த் குட்கா" மற்றும் "நைல் ஹெர்பல் ஷாம்பு" போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களையும் செய்தார். அதற்கு மேலும் இந்தி திரையுலகில் முன்னேற வாய்ப்பிலாத காரணத்தால், அவர் ஒரு ஆங்கில இலக்கிய பாடம் படிக்க எண்ணி சூரத்துக்குத் திரும்ப் திட்டம் வைத்திருந்தார். ஆனால் பின்னர் ஒரு தெலுங்கு படத்திற்கான ஆடிஷனுக்கான அழைப்பை ஏற்று, அதில் தேர்ந்தெடுத்த காதல் முக்கோணக் காதல் கதையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார். அவரது அடுத்த படத்தில், இயக்குநர் சரண் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அதிரடி திரைப்படமான ஜெமினி (2002), என்பதில் நடிகர் வெங்கடேசுக்கு இணையாக நடித்தது அனைவரது கவனத்தை ஈர்த்தது. மேலும் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்தது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இந்த படத்திற்காக அவர் "பைரவி" என்ற பெயரையும் மாற்றிக்கொண்டார். ஆனால் பின்னர் அவரது அசல் பெயருக்கு மாற்றிக்கொண்டார்.[3][4]
2000 களின் நடுப்பகுதியில், அவரது உயரம் மற்றும் முதிர்ந்த தோற்றத்தினால் தமிழ் மொழித் திரைப்படங்களில் விரைவாக பிரபலமடைந்தார், திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரது தோற்றத்திற்கு இணையான நடிகர்களான விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி. மற்றும் சரத்குமார் போன்றவர்களுடன் இணைத்து நடிக்க வைத்தனர்.[5] அத்தகைய நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ச்சியான வணிக ரீதியில் வெற்றி பெற்ற ஏய் (2005), சாணக்கியா (2005) மற்றும் ஆணை (திரைப்படம்) (2005) போன்ற அதிரடி படங்களில் அவர் தோன்றினார். அதேபோல், அவர் மூத்த நடிகர்களுடனும் நகைச்சுவை படங்களில் தவறாமல் நடித்தார். making appearances in சித்திகின் எங்கள் அண்ணா (திரைப்படம்) (2004) மற்றும் சக்தி சிதம்பரத்தின் தொடர்ச்சியான ஆறு நகைச்சுவை படங்களில் நடித்தார். இந்த காலகட்டத்தில், அவர் தனது முதல் இந்தித் திரைப்படமான 'லவ் கே சக்கர் மே' எனறப் படத்தில் தோன்றினார். நமிதா ஐ லவ் யூ என்ற கன்னடத் திரைப்படத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஆங்கிலப் படமான மாயா என்ற படத்தில் நடித்தார். பின்னர் இப்படம் "காமசூத்ரா நைட்ஸ்" (2008) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[6]
2007 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த இரண்டு முன்னணி இளைய நடிகர்களுடன் முறையே, விஜய் நடித்து ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அழகிய தமிழ்மகன் (2007) மற்றும் அஜித் குமார் நடித்து விஷ்ணுவர்தனின் அதிரடித் திரைப்படமான பில்லா (2007) போன்றப் படங்களில் தோன்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த காலகட்டத்தின் முடிவில், படங்களில் கவர்ச்சியாக தோன்றியதன் விளைவாக நமீதா ஒரு "வழிபாட்டு முறையை" உருவாக்கினார். ஊடகங்கள் தொடர்ந்து அவரைப் பற்றி எழுதி வந்தது.[7][8][9]
திருமணம்
[தொகு]நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.[10]
நமிதா நடித்துள்ள படங்கள்
[தொகு]- 1. சொந்தம் - (தெலுங்கு) -2002
- 2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
- 3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
- 4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004
- 5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
- 6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
- 7. ஏய் - (தமிழ்) 2005
- 8. சாணக்யா - (தமிழ்) - 2005
- 9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
- 10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
- 11. ஆணை - (தமிழ்) - 2005
- 12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
- 13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
- 14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
- 15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
- 16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
- 17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
- 18. வியாபாரி - (தமிழ்) - 2007
- 19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
- 20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007
- 21. பில்லா 2007 - (தமிழ்) - 2007
- 22. சண்ட - (தமிழ்) - 2008
- 23. பாண்டி - (தமிழ்) - 2008
- 24. இந்திரா - (கன்னடம்) - 2008
- 25. பெருமாள் - (தமிழ்) - 2009
- 26. தீ - (தமிழ்) - 2009
- 27. 1977 - (தமிழ்) - 2009
- 28. பில்லா - (தெலுங்கு) - 2009
- 29. இந்திரவிழா - (தமிழ்)
- 30. ஜகன்மோகினி - (தமிழ்)
- 31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
- 32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
- 33. மாயா - (ஆங்கிலம்)
- 34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்
நமிதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- எங்கள் அண்ணா (2004)
- ஏய் (2005)
- சாணக்கியா (2005)
- பம்பரக்கண்ணாலே (2007)
- ஆணை (2005)
- இங்கிலீஷ்காரன் (2005)
- கோவை பிரதர்ஸ் (2006)
- பச்சக் குதிர (2006)
- தகப்பன்சாமி (2006)
- நீ வேணுன்டா செல்லம் (2006)
- வியாபாரி (2007)
- நான் அவன் இல்லை (2007)
- அழகிய தமிழ் மகன் - (2007)
- பில்லா - (2007)
மனிதநேய நடவடிக்கைகள்
[தொகு]நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.[11] இவர் அரசியலுக்கு வரப்போவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தார்.[12]
தொலைக்காட்சி
[தொகு]வருடம் | பட்டம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2017 | பிக் பாஸ் தமிழ் 1 | பங்கேற்பாளர் | ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடர்[13] |
ஆதாரம்
[தொகு]- ↑ http://www.youtube.com/watch?v=WKE_pajGHsM
- ↑ "Namitha was crowned Miss Surat in 1998 – The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 29 August 2013. Archived from the original on 2 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Telugu Cinema Etc. Idlebrain.com (16 September 2002). Retrieved on 2019-01-01.
- ↑ "Telugu cinema article – Namita photo – stolen from Namitha's desktop". www.idlebrain.com. 20 March 2000.
- ↑ Namitha interview – Telugu Cinema interview – Telugu film and Tamil film actress. Idlebrain.com (30 July 2008). Retrieved on 2019-01-01.
- ↑ "Namitha stars in English movie". The Hindu. 14 August 2006.
- ↑ "Tamil movies : Namitha the omnipotent and the omnipresent". www.behindwoods.com.
- ↑ "Tamil Nadu / Chennai News : Namitha goes to `Subway' for meal". The Hindu. 21 October 2005. Archived from the original on 26 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2019.
- ↑ I Will Do It For A Lesser Payment, Says Namitha – Namitha – Dirty Picture – Tamil Movie News. Behindwoods.com (30 June 2012). Retrieved on 2019-01-01.
- ↑ "நடிகை நமிதா திருமணம் : திருப்பதியில் இன்று காலை நடைபெற்றது!".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
- ↑ மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருவேன்: நடிகை நமீதா பேட்டி. தி இந்து தமிழ் 03. செப்டம்பர் 2015
- ↑ "Bigg Boss Tamil: How Oviya Helen became the premiere season's most sensational contestant- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. http://www.firstpost.com/entertainment/bigg-boss-tamil-how-oviya-helen-became-the-premiere-seasons-most-sensational-contestant-3884305.html.