உள்ளடக்கத்துக்குச் செல்

நயீப் புக்கெலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயீப் பெக்கெலே
Nayib Bukele
President of எல் சால்வடோரின் 81-ஆவது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2019[1]
முன்னையவர்சல்வடோர் சான்செசு செரேன்
சான் சல்வடோர் நகர முதல்வர்
பதவியில்
1 மே 2015 – 30 ஏப்பிரல் 2018
புதிய குசுகத்லான் நகர முதல்வர்
பதவியில்
1 மே 2012 – 30 ஏப்பிரல் 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நயீப் அர்மாண்டோ புக்கெலே ஓர்ட்டெசு

24 சூலை 1981 (1981-07-24) (அகவை 43)
சான் சல்வடோர், எல் சால்வடோர்
அரசியல் கட்சிபுதிய யோசனைகள் கட்சி (2017 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
  • தேசிய ஒற்றுமைக்கான மாபெரும் கூட்டணி (2018–2023)
  • சனநாயக மாற்றம் (2018)
  • சுயேச்சை (2017)
  • பரபுண்டோ மார்ட்டீ தேசிய விடுதலை முன்னணி (2012–2017)
துணைவர்
கப்ரியேலா ரொட்ரீகசு (தி. 2014)
பிள்ளைகள்2
பெற்றோர்
  • அர்மாண்டோ புக்கெலே கட்டான் (தந்தை)
கல்விமத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகம், சான் சல்வடோர் (பட்டமில்லை)
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்
கையெழுத்து

நயீப் அர்மாண்டோ புக்கெலே ஓர்ட்டெசு (Nayib Armando Bukele Ortez, பிறப்பு: 24 சூலை 1981) எல் சால்வடோர் அரசியல்வாதியும், தொழிலதிபரும், 2019 முதல் அந்நாட்டின் அரசுத்தலைவரும் ஆவார். புதிய யோசனைகள் கட்சியின் உறுப்பினரான இவர், 1989-இற்குப் எல் சால்வடோரின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான வலதுசாரி தேசியவாத குடியரசுக் கூட்டணி, அல்லது இடதுசாரி பராபுண்டோ மார்ட்டி தேசிய விடுதலை முன்னணி ஆகியவற்றுள் ஒன்றின் வேட்பாளரல்லாத அரசுத்தலைவரான முதல் அரசியல்வாதி ஆவார். முன்னதாக பராபுண்டோ மார்ட்டி தேசிய விடுதலை முன்னணியில் நயீப் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார்.

நயீப் 1999 இல் ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினார், அவரது தந்தை அர்மாண்டோ புக்கெலேயிற்குச் சொந்தமான ஒரு விளம்பர நிறுவனத்திலும் பணியாற்றினார்; இரண்டு நிறுவனங்களும் பராபுண்டோ மார்ட்டி தேசிய விடுதலை முன்னணிக்கான தேர்தல் பரப்புரை விளம்பரங்களை வெளியிட்டு வந்தன.[2] 2011 இல், நயீப் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு, அவர் அக்கட்சியில் சேர்ந்து, புதிய கஸ்காட்லான் நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் சான் சால்வடாரின் முதல்வராக 2018 வரை பணியாற்றினார்.[4] சிறிது காலத்திற்குப் பிறகு நயீப் "புதிய யோசனைகள்" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2019 இல் அரசுத்தலைவருஇக்கான தேர்தல் பரப்புரையைத் தொடர்ந்தார். சால்வடோரின் உச்ச தேர்தல் நீதிமன்றம் இக்கட்சியைப் பதிவு செய்ய மறுத்ததை அடுத்து, நயீப் தேசிய ஒற்றுமைக்கான மாபெரும் கூட்டணி என்ற கட்சியில் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 53% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[5]

புக்கெலே சூலை 2019 இல் பிராந்தியக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தினார், இது நாட்டின் 2019 கொலை விகிதத்தை[6] 100,000 பேருக்கு 38 ஆகக் குறைக்க முயன்ற ஒரு கும்பல்-எதிர்ப்புத் திட்டமாகும். புக்கெலே பதவியேற்ற முதல் ஆண்டில் கொலைகள் 50 சதவிகிதம் குறைந்தது.[7] எல் ஃபாரோ, அமெரிக்க அரசுத் திணைக்களம் ஆகியவை கொலை விகிதத்தைக் குறைக்க புக்கெலேயின் அரசாங்கம் இரகசியமாகக் கும்பல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டின. மார்ச் 2022 இல் ஒரு வார இறுதியில் 87 பேர் கொலைக் கும்பலால் கொல்லப்பட்டதை அடுத்து, புக்கெலே கும்பல்களுக்கு எதிராக நாடு தழுவிய அடக்குமுறையைத் தொடங்கினார். இதன் விளைவாக அக்டோபர் 2024 க்குள் 82,900-இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், 12,000 க்கும் அதிகமானோர் புதிய பயங்கரவாத தடுப்பு மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டின் கொலை விகிதம் 2023 இல் 100,000 க்கு 2.4 ஆகக் குறைந்தது, இது அமெரிக்காக்களில் (கனடாவிற்குப் பிறகு) இரண்டாவது மிகக் குறைந்த வீதமாகும்.[8] எல் சால்வடோரில் பிட்காயினை 2021 இல் சட்டப்பூர்வமாக்கினார். அத்துடன் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி பிட்காயின் நகரத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை ஊக்குவித்தார்.[9] சூன் 2023 இல், உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கையை 262-இல் இருந்து 44 ஆகவும்,[10] சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 84-இலிருந்து 60 ஆகவும் குறைப்பதற்கான புக்கெலேயின் முன்மொழிவுகளுக்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. 2024 அரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 85% இற்கும் மேல் பெற்று பெருவெற்றி பெற்றார். 1944-இற்குப் பிறகு இரண்டாவது தடவையாகத் முதல் சால்வடோர் அரசுத்தலைவர் ஆனார்.[11]

அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் புக்கெலே ஒரு சர்வாதிகார, எதேச்சாதிகார ஆட்சியாளர் என்று குற்றம் சாட்டினர். மே 2021 இல், அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் "புதிய யோசனைகள்" கட்சி சட்டமன்றப் பெரும்பான்மையை வென்ற பிறகு, சட்டமன்றத்தில் புக்கெலேயின் ஆதரவாளர்கள் சட்டமா அதிபர், உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அவையின் அனைத்து ஐந்து நீதிபதிகள் ஆகியோரை மாற்ற வாக்களித்தனர். புக்கெலே சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்களையும், செய்தி நிறுவனங்களையும் தாக்கியுள்ளார் என்றும், பத்திரிகைகளை தணிக்கை செய்யும் சட்டங்களைக் கொண்டு வந்தார் என்றும் விமரிசகர்கள் கூறுகின்றனர். புக்கெலே அரசுத்தலைவராகும் முன்னர், அவர் தன்னைத் தீவிர இடதுசாரி உறுப்பினராகக் கருதினார்; அரசுத்தலைவரான பின்னர், அவர் எந்த அரசியல் சித்தாந்தங்களுடனும் அடையாளம் காணவில்லை, ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் அவரை ஒரு பரப்பியப் பெருந்திரள்வாதி என்றும் பழமைவாதி என்று கூறுகின்றனர். புக்கெலே எல் சால்வடார் மட்டுமல்லாது இலத்தீன் அமெரிக்கா முழுவதும் பிரபலமானவராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Designada del Presidente ya Sanciona Decretos como Encargada del Despacho" [Presidential Designate Now Sanctions Decrees as In Charge with the Office]. El Mundo. 14 December 2023. Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  2. "Nayib Armando Bukele Ortez (Vigente)" [Nayib Armando Bukele Ortez (Current)]. Government of El Salvador. 19 September 2019. Archived from the original on 12 April 2024. பார்க்கப்பட்ட நாள் 12 April 2024.
  3. "Elecciones El Salvador 2012 – Concejos Municipales – La Libertad – Nuevo Cuscatlán" [El Salvador Elections 2012 – Municipal Councils – La Libertad – Nuevo Cuscatlán]. Supreme Electoral Court (in ஸ்பானிஷ்). 2012. Archived from the original on 13 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  4. Ortiz de Zárate, Roberto, ed. (11 February 2019). "Nayib Bukele Ortez". Barcelona Centre for International Affairs. Archived from the original on 16 December 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2024.
  5. Palumbo, Gene; Malkin, Elisabeth (3 February 2019). "Nayib Bukele, an Outsider Candidate, Claims Victory in El Salvador Election". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  6. Watts, Jonathan (22 August 2015). "One Murder Every Hour: How El Salvador Became the Homicide Capital of the World". தி கார்டியன் (in ஆங்கிலம்). San Salvador, El Salvador. Archived from the original on 28 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  7. Silva Ávalos, Héctor (21 June 2019). "El Salvador Flirts with 'Mano Dura' Security Policies Again". InSight Crime. Archived from the original on 10 February 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  8. Renteria, Nelson; Hilaire, Valentine (3 January 2024). O'Brien, Rosalba (ed.). "El Salvador Says Murders Fell 70% in 2023 as It Cracked Down on Gangs". ராய்ட்டர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
  9. "El Salvador Bitcoin City Planned at Base of Conchagua Volcano". BBC News. 21 November 2021. Archived from the original on 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
  10. Velásquez, Eugenia (1 June 2023). "Bukele Pide Reducir de 262 a 44 Municipios y de 84 Diputados a 60" [Bukele Ask to Reduce from 262 to 44 Municipalities and from 84 Deputies to 60]. El Diario de Hoy. Archived from the original on 1 June 2023. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
  11. Murray, Christine (5 February 2024). "El Salvador's President Nayib Bukele Set for Landslide Election Victory after Gang Crackdown". பைனான்சியல் டைம்ஸ் (in ஸ்பானிஷ்). Archived from the original on 11 February 2024. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]