உள்ளடக்கத்துக்குச் செல்

நர்கிஸ் நேஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நர்கிசு நேஹான் (Nargis Nehan) ( காபுல், ஆப்கானிஸ்தான், 1981[1] ) ஆப்கானித்தானைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர், அசரஃப் கனியின் அரசங்கத்தில் சுரங்கங்கள், பெட்ரோலியம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவரது தலைமுறையின் பல ஆப்கானியர்களைப் போலவே, இவரும் தனது நாட்டின் பல தசாப்த காலப் போரிலிருந்து தப்பிக்க ஆப்கானித்தானை விட்டு குழந்தையாக இருக்கும் போதே (தனது 12 வயதில்) வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3] ஆப்கான் உள்நாட்டுப் போரின்போது (1992-1996) நேஹானின் குடும்பம் காபூலை விட்டு வெளியேறியது. மேலும், 1980களில் சோவியத்–ஆப்கான் போர் தொடங்கி பாக்கித்தானில் குடியேறிய இலட்சக்கணக்கான ஆப்கான் அகதிகளுடன் இவரும் வளர்ந்தார். பாக்கித்தானில் இயங்கிவரும் ஆப்கானித்தான் அகதிகள் சமூகத்திற்கு உதவி வழங்கும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து தனது கல்விக்கு இவர் நிதியுதவி பெற்றார்.[4]

தொழில்

[தொகு]

வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற நேஹான்,[5] 2001இல் ஆப்கானித்தானில் அமெரிக்கா படையெடுத்ததைத் தொடர்ந்து நோர்வே அகதிகள் அமைப்புடன் பணிபுரிந்தார். அந்த படையெடுப்பு ஆப்கானித்தானின் தாலிபான் ஆட்சியை வீழ்த்திய பிறகு, நோர்வே உதவி அமைப்பு தனது அலுவலகத்தை திறக்க காபூலுக்குத் திரும்பும்படி இவரை நியமித்தது. நேஹான் அதை ஏற்றுக் கொண்டு காபூல் திரும்பினார். பின்னர் ஆப்கன் இடைக்கால நிர்வாகத்துடன் தொடர்ச்சியான நிலைப்பாடுகளை எடுக்க நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.[4] ஆப்கானித்தன் அரசில் சேர்ந்து அரசாங்கத்தில் நிதி அமைச்சகத்தில் கருவூலத் துறை தலைமை இயக்குநர், காபூல் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் நிதிக்கான துணைவேந்தர், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களுக்கு மூத்த நிர்வாக ஆலோசனையாளர் போன்ற பதவிகளை இவர் வகித்து வந்தார். இவர் நிதி அமைச்சகத்தில் கருவூலத் துறையில் சீர்திருத்தங்களை நிர்வகித்தார். மேலும் உலக வங்கி நிதியுதவி, கல்வி அமைச்சகத்திற்கான ஐந்தாண்டு முக்கியத் திட்டத்தின் வளர்ச்சியிலும் ஈடுபட்டார்.[6][7]

நேஹான், 2017இல் சுரங்கம், பெட்ரோலியம், தொழில் ஆகிய துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016இல் தாவூத் ஷா சபா என்பவர் பதவி விலகியதைத் தொடர்ந்து இவர் அந்தப் பொறுப்பை ஏற்ற இரண்டாவது அமைச்சரானார்.[8]

ஆகத்து 2021 இல் காபூலில் தாலிபான் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு, நேஹான் நோர்வேக்கு வெளியேறினார்.

வெளியீடுகள்

[தொகு]

2007ஆம் ஆண்டில், இவர், ஆப்கானிய குடியரசுத் தலைவர் அசரஃப் கனி அகமத்சய்யுடன் இணைந்து, பட்ஜெட் ஆஃப் தி லிஞ்ச்பின் ஆஃப் தி ஸ்டேட்: லெசன்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.[5][9]

செயற்பாடு

[தொகு]

இவர், சமத்துவம் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் நிறுவனர் ஆவார்.[10][10][11] இதன் நோக்கம்: "பெண்களையும் இளைஞர்களையும் செயலில் முடிவெடுப்பவர்களாக ஆக்குவதன் மூலமும், வாக்களிப்பதன் மூலம் தங்களின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பதன் மூலமும், மாநில நிறுவனங்களின் செயல்திறனை கண்காணிப்பதன் மூலமும், பொதுக் கொள்கைகளுக்கு தங்களைப் பொறுப்பாக்குவதன் மூலமும்" அன்றாட வாழ்வில் மாற்றத்தின் முகவர்கள் ஆக மாற்றுவதே " [12]

நேஹான், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஆப்கான் கூட்டமைப்பான குடிமை அமைப்பின் கூட்டு பணிக்குழு உறுப்பினராகவும், நாட்டின் மத்திய வங்கியான ஆப்கானித்தான் வங்கியின் உயர்மட்ட அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார். மத்திய வங்கியின் தலைமைத்துவத்தின் முதல் பெண்மணி இவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Afghan Biographies: Nehan, Nargis Mrs".
  2. https://www.nrk.no/nyheter/tidlegare-afghansk-minister-evakuert-1.15625996. Retrieved 27 August 2021
  3. "Biography of Ms. Nargis Nehan, Acting Minister for Ministry of Mines and Petroleum | Ministry of Mines". momp.gov.af. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  4. 4.0 4.1 "Afghan minister for mines: As a woman I realise I have to work very hard". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  5. 5.0 5.1 5.2 "Afghan Biographies: Nehan, Nargis Mrs"."Afghan Biographies: Nehan, Nargis Mrs".
  6. "Ministry of Mines, Petroleum and Industries: Biography of Ms. Nargis Nehan".
  7. "Database". www.afghan-bios.info. பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  8. "Nargis Nehan Takes Over As Acting Minister of Mines". Tolo News. Archived from the original on 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  9. "The Budget as the Linchpin of the State: Lessons from Afghanistan" (PDF).
  10. 10.0 10.1 "Ms. Nargis Nehan |". www.epd-afg.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  11. "Message from the Founder". www.epd-afg.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  12. "EQUALITY for Peace and Democracy: Message from the Founder". Archived from the original on 2020-11-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.

வெளி இணைப்புகள்

[தொகு]