பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்)
Appearance
தீவிரவாத எதிர்ப்புப் படை (Counter Insurgency Force (CIF West Bengal), இந்தியாவின் மேற்கு வங்காள காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். இதன் தலைமையிடம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கரியா பகுதியில் உள்ளது. இப்பிரிவு 2010ஆம் ஆண்டில், காவல்துறையில் சிறப்பாக செயல்படும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை தேர்வு செய்து நிறுவப்பட்டது. இப்படையில் 1,000 பேர் உள்ளனர். துர்காபூர் மற்றும் சல்போனியில் இப்படையினர்க்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்படைப்பிரிவுக்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமை வகிப்பார். இப்படை நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகளை ஒடுக்க செயல்படுகிறது.[1]
இதனையும் காண்க
[தொகு]- நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
- சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்)
- பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு
- பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு)
- போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Top Maoist leader Kishenji killed". Hindustan Times. Archived from the original on 26 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.