பவத் கான்
பவத் அப்சல் கான் (Fawad Afzal Khan பிறப்பு: நவம்பர் 29, 1981) ஒரு பாகிஸ்தான் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், விளம்பர மாதிரி மற்றும் பாடகர் ஆவார். பிலிம்பேர் விருது, மூன்று லக்ஸ் ஸ்டைல் விருதுகள் மற்றும் ஆறு ஹம் விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் வெளியான தஸ்தான் எனும் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இதற்காக பாகிஸ்தான் ஊடக விருதுகளில் சிறந்த ஆண் நடிகருக்கான விருதைப் பெற்றார். பாக்கிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹம்ஸஃபர் (2011) இல் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், மேலும் சுல்தானா சித்திகியின் நாடகமான ஜிண்டகி குல்சார் ஹை (2012) இல் நடித்தார். இரண்டு நிகழ்ச்சிகளுக்காகவும், சிறந்த நடிகருக்கான லக்ஸ் ஸ்டைல் விருதைப் பெற்றார்.2014 ஆம் ஆண்டில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான கூப்சுரத் (2014) திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கான் பாலிவுட்டில் அறிமுகமானார். இதற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]29 நவம்பர் 1981 அன்று லாகூரில் கான் பிறந்தார் இவர் பதான் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார் . அவர் லாகூரில் வசிக்கிறார், பஞ்சாபி இவரின் தாய்மொழி ஆகும். இவரது தந்தை பிரித்தானியாவின் இந்தியாவின் பாட்டியாலாவில் (இப்போது பஞ்சாப், இந்தியா ) பிறந்தார், 1947 பிரிவினைக்குப் பிறகு இளம் வயதிலேயே பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இவரது தாயின் குடும்பம் பிரித்தானியாவின் இந்தியாவின் லக்னோவில் (இப்போது உத்தரபிரதேசம் ) குடியேறியது.[1] கானின் இளாமைப் பருவத்தில் இவரது தந்தை மருந்து விற்பனையில் இருந்தார். வளைகுடாப் போரின்போது குடும்பம் ஏதென்ஸ், துபாய், ரியாத் மற்றும் மான்செஸ்டரில் வசிக்க வேண்டியிருந்தது. இவருக்கு 13 வயதாக இருந்தபோது அவரது குடும்பத்தினர் லாகூருக்குத் திரும்பினர். குழந்தை பருவத்திலிருந்தே கான் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூரின் ரசிகராக இருந்தார். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது மூத்த சகோதரி அலியா ஒரு கட்டிடக் கலைஞர் மற்றும் இவரது தங்கை சனா ஒரு மருத்துவராக உள்ளார்.[2]
இவர் ஒரு அமெரிக்க பள்ளியில் படித்தார். அங்கு அவர் இனப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அவரது கூச்ச மற்றும் அமைதியான பாங்கு காரணமாக கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.[3] கான் ஜோஹர் டவுன் (எல்ஜிஎஸ் ஜே.டி) லாகூர் இலக்கணப் பள்ளியில் தனது ஏ- பிரிவில் தேர்ச்சி பெற்றார்.மேலும் லாகூரில் மென்பொருள் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4][5][6] பொறியாளராக அவருக்கு வேலை கிடைக்காததால் இவர் நடிக்கத் தொடங்கினார்.[7] ஃபோர்ப்ஸ் இந்தியா நேர்காணலில் தான் விளம்பரத் துறையில் வேலை தேடத் தவறிவிட்டதாக கூறினார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கான் ஆடை வடிவமைப்பாளரான சதாஃப் கானை 2005 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[9][10] இவர்களுக்கு அயன் என்ற மகனும், எலெய்னா என்ற மகளும் உள்ளனர்.[11][12]
ஒரு விபத்தில் இவரின் கணையம் பாதிப்பிற்கு உள்ளானது. இவரின் 17 ஆம் வயதில் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.[13] நீச்சல் குளத்தின் பின்னால் இந்த விபத்து நிகழ்ந்தது.
விருது
[தொகு]பிலிம்பேர் விருது, மூன்று லக்ஸ் ஸ்டைல் விருதுகள் மற்றும் ஆறு ஹம் விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளியான தஸ்தான் எனும் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தற்காக பாகிஸ்தான் ஊடக விருதுகளில் சிறந்த ஆண் நடிகருக்கான விருதைப் பெற்றார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Shakeen, Parkar (10 April 2014). "Transcending Boundaries: Pakistani Actors In B-Town Films". Mid Day. Archived from the original on 20 November 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
- ↑ Shuti, Battacharya (29 May 2018). "Fawad Khan Looked Jaw-Droppingly Handsome At His Sister's Engagement". iDiva. Archived from the original on 29 May 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
- ↑ "Fawad Khan was bullied in his school days". Daily News and Analysis. 15 October 2015 இம் மூலத்தில் இருந்து 16 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151016131750/http://www.dnaindia.com/entertainment/report-fawad-khan-was-bullied-in-his-school-days-2135111. பார்த்த நாள்: 25 June 2018.
- ↑ "I was bullied in school, says Fawad Khan". The Express Tribune. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 15 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160515193307/http://tribune.com.pk/story/971478/i-was-bullied-in-school-fawad-khan/. பார்த்த நாள்: 28 June 2018.
- ↑ "Real life fairy tales". The News International. 12 October 2015 இம் மூலத்தில் இருந்து 28 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180628055653/https://www.thenews.com.pk/magazine/you/280161-real-life-fairy-tales. பார்த்த நாள்: 28 June 2018.
- ↑ "Fawad Khan: An actor & a gentleman". Forbes India. 19 March 2016 இம் மூலத்தில் இருந்து 30 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170730144539/http://www.forbesindia.com/article/play/fawad-khan-an-actor-a-gentleman/42717/1. பார்த்த நாள்: 27 July 2017.
- ↑ "I became an actor to make money, reveals Fawad Khan". டெக்கன் குரோனிக்கள். 14 August 2017 இம் மூலத்தில் இருந்து 5 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171005000949/http://www.deccanchronicle.com/entertainment/bollywood/140816/i-became-an-actor-to-make-money-reveals-fawad-khan.html. பார்த்த நாள்: 27 July 2017.
- ↑ "am on a mission to loosen up: Fawad Khan". Aaj News. 27 April 2018 இம் மூலத்தில் இருந்து 31 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160531221721/https://aaj.tv/2016/04/i-am-on-a-mission-to-loosen-up-fawad-khan/. பார்த்த நாள்: 25 June 2018.
- ↑ "How I act onscreen isn't real but my marriage truly is, says Fawad Khan". Dawn. 7 April 2015 இம் மூலத்தில் இருந்து 17 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171017045011/https://www.dawn.com/news/1174475. பார்த்த நாள்: 16 October 2017.
- ↑ "Fawad Khan reveals his relationship status with his wife". Business Recorder. 23 March 2017 இம் மூலத்தில் இருந்து 16 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171016235306/https://www.brecorder.com/2017/05/23/349932/fawad-khan-reveals-his-relationship-status-with-his-wife/. பார்த்த நாள்: 16 October 2017.
- ↑ "From Ashar to Prince Vikram — Pakistan's Khan first!". Dawn. 2 February 2015 இம் மூலத்தில் இருந்து 14 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150814091737/https://www.dawn.com/news/1161012. பார்த்த நாள்: 24 June 2018.
- ↑ "Pic: Fawad Khan's daughter Elayna makes first public appearance with the family". Times of India. 15 October 2017 இம் மூலத்தில் இருந்து 18 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171018010329/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/abram-to-azad-rao-khan-cute-star-kids-of-bollywood/fawad/photostory/61090104.cms. பார்த்த நாள்: 15 October 2017.
- ↑ "5 celebrities you didn't know have diabetes and how they overcame it". The Express Tribune. 14 November 2017 இம் மூலத்தில் இருந்து 16 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171216222015/https://tribune.com.pk/story/1558023/4-5-celebrities-didnt-know-diabetes-overcame/. பார்த்த நாள்: 26 June 2018.