உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி
இயக்கம்ஞான ராஜசேகரன்
தயாரிப்புசுஜாதா ரங்கநாதன்,
எம். வரதராஜன்,
கே. மணிபிரசாத்
கதைஞான ராஜசேகரன்
இசைஇளையராஜா
நடிப்புசாயாஜி ஷிண்டே,
தேவயானி,
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபி. லெனின்,வி. டி. விஜயன்
விநியோகம்மீடியா ட்ரீம்ஸ் தனியார் நிறுவனம்
வெளியீடு2000
ஓட்டம்150 நிமிடங்கள்.
மொழிதமிழ்

பாரதி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயானியும் நடித்துள்ள இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.[1][2][3]

கதைச்சுருக்கம்

[தொகு]

இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதாப்பாத்திரம்
சாயாஜி ஷிண்டே சுப்பிரமணிய பாரதி
தேவயானி செல்லம்மாள்
புஷ்பாக் ரமேஷ் சிறு வயது பாரதியாக
ரமேஷ் குமார் பாரதியின் நண்பராக
நிழல்கள் ரவி எஸ். பி. ஒய். சுரேந்திரநாத் ஆர்யா
டி. பி. கஜேந்திரன் குவளை

வகை

[தொகு]

கலைப்படம் / வரலாற்றுப்படம்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும்

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அக்கினி குஞ்சொன்று கே. ஜே. யேசுதாஸ் சுப்பிரமணிய பாரதி
2 பாரத சமுதாயம் கே. ஜே. யேசுதாஸ் சுப்பிரமணிய பாரதி
3 எதிலும் இங்கு மது பாலகிருஷ்ணன் புலமைப்பித்தன்
4 பிரெஞ்ச் இசை இளையராஜா -
5 கேளடா மானிடவா ராஜ்குமார் பாரதி சுப்பிரமணிய பாரதி
6 மயில்போல பொண்ணு பவதாரிணி மு. மேத்தா
7 நல்லதோர் வீணை மனோ, இளையராஜா சுப்பிரமணிய பாரதி
8 நின்னைச் சரணடைந்தேன் பாம்பே ஜெயஸ்ரீ சுப்பிரமணிய பாரதி
9 நின்னைச் சரணடைந்தேன் இளையராஜா சுப்பிரமணிய பாரதி
10 நிற்பதுவே நடப்பதுவே ஹரிஷ் ராகவேந்திரா சுப்பிரமணிய பாரதி
11 வந்தேமாதரம் மது பாலகிருஷ்ணன் சுப்பிரமணிய பாரதி

இவற்றையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Viswanathan, S. (10 November 2000). "In search of an Answer". Frontline. Vol. 17, no. 22. Archived from the original on 21 June 2011. பார்க்கப்பட்ட நாள் 11 January 2011.
  2. ஜெயந்தன், ஆர்.சி. (22 January 2021). "மரங்களுக்குள்ளே ஒரு மரபணுக் கூட்டம்! - இ.வி. கணேஷ் பாபு நேர்காணல்". Hindu Tamil Thisai. Archived from the original on 24 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 July 2022.
  3. "வாழும் பாரதி!" (PDF). கல்கி. 17 September 2000. pp. 28–30. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023 – via Internet Archive.