உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம்

ஆள்கூறுகள்: 02°56′13.4″N 101°41′58.1″E / 2.937056°N 101.699472°E / 2.937056; 101.699472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம்
Public Services Commission of Malaysia
Suruhanjaya Perkhidmatan Awam Malaysia

PSC SPA
மலேசிய பொதுச் சேவைகள் ஆணைய தலைமையகம்
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
வகைமலேசிய நடுவண் அரசு
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Level 6-10, Block C7, Complex C,
Federal Government Administrative Centre,
62520 புத்ராஜெயா
02°56′13.4″N 101°41′58.1″E / 2.937056°N 101.699472°E / 2.937056; 101.699472
குறிக்கோள்இலகு, துரிதம், துல்லியம்
Convenient, Prompt and Accurate
Mudah, Cepat dan Tepat
பணியாட்கள்483 (2018)
ஆண்டு நிதிMYR 37,491,400 (2018)
மூல நிறுவனம்மலேசிய நாடாளுமன்றம்
வலைத்தளம்www.spa.gov.my
அடிக்குறிப்புகள்
மலேசிய அரசியலமைப்பு பிரிவு 144(1)
Article 144(1) of the Federal Constitution of Malaysia

மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம் (மலாய்: Suruhanjaya Perkhidmatan Awam Malaysia (SPA); ஆங்கிலம்: Public Services Commission of Malaysia) (PSC); என்பது மலேசிய நடுவண் அரசு சார்ந்த பொதுச் சேவைகளின் (Public Services of Malaysia's Federal Government) பொது நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் ஆணையம் ஆகும்.[1]

இந்த ஆணையம் மலேசிய அரசியலமைப்பு பிரிவு 139-இன் (Article 139 of the Constitution of Malaysia) மூலம் நிறுவப்பட்டது.[2]

மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய நடுவண் அரசின் பொதுச் சேவைகளில் (Federal Civil Service) பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களின் நடத்தைகள் (Conducts) தொடர்பான விதிமுறைகளையும்; மற்றும் ஒழுங்கு முறைகளையும் (Rules and Regulations) இந்த ஆணையம் தீர்மானக்கிறது.

பொது

[தொகு]

மலேசிய பொதுச் சேவைகளில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களை நியமிக்கவும்; பணிநீக்கம் செய்யவும் மலேசிய பொதுச் சேவைகள் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

மலேசிய மாமன்னர் (King of Malaysia) நியமித்த சிறப்புப் பதவிகளுக்கான (Designated Special Posts) அதிகாரிகள் குறித்து மலேசிய மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் உரிமையும் இந்த ஆணையத்திற்கு உண்டு.

மலேசிய மாமன்னர்

[தொகு]

மலேசிய அரசியலமைப்பு பிரிவு 139(4)-இல் (Article 139(4) of the Federal Constitution) குறிப்பிடப் பட்டதற்கு இணங்க; மலேசிய பொதுச் சேவைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களை; மலேசிய மாமன்னர் (Yang di-Pertuan Agong); அவரின் விருப்பத்திற்கு இணங்க நியமிக்க இயலும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The SPA manages the appointment of members to the General Public Service of the Federation, the Joint Public Services, and the Public Service of Malacca, Penang, Perlis, and Negeri Sembilan". www.malaysia.gov.my. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
  2. "Suruhanjaya Perkhidmatan Awam (SPA), Jabatan Perdana Menteri". பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]