மேற்கு செமிடிக் மொழிகள்
மேற்கு செமிடிக் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா |
இன வகைப்பாடு: |
ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் |
துணைக் குழுக்கள்: |
மேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் குழுப்படுத்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள மொழிக் குழுவாகும். செமிடிக் மொழியியளலர்களான உறோபட் ஏட்சுரோன் மற்றும் யோன் என்ர்காட் போன்றோர்கள், செம்டிக் மொழியை, கிழக்கு செமிடிக், மேற்கு செமிடிக் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்குகின்றனர். கிழக்கு செமிடிக் மொழிகள் அழிந்துபோன இரண்டு மொழிகளான அக்காத் மொழி, எப்லேயிட் கொண்டுள்ள அதேவேலை மீதமுள்ள செமிடிக் மொழிகள் அனைத்தும் மேற்கு செமிடிக் பிரிவில் சேர்க்கப்படுகிறது.[1]
மேற்கு செமிடிக் மொழிகள் பின்வரும் தெளிவான உப குழுக்களை கொண்டுள்ளது: எத்தியோப்பிய மொழிகள், தெற்கு அராபிய மொழிகள், அரபு மொழி மற்றும் வடமேற்கு செமிடிக் மொழிகள் என்பனவாகும். எத்தியோப்பிய மற்றும் தெற்கு அராபிய மொழிகள் பொதுவான இயல்புகள் பலவற்றை கொண்டுள்ள படியால் அவை பொதூவாக்க தெற்கு செமிடிக் மொழிகள் என குழுப்படுத்தப்படுகின்றன. அரபு மொழியின் சரியான குழுப்படுத்தல் தர்க்கிக்கப்படுகிறது. இருப்பினும், உறோபட் ஏட்சுரோன் மற்றும் யோன் என்ர்காட் என்பவர்கள் அரபு மொழியை வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் இணைத்து மாத்திய செமிடிக் என்ற உபகுழுவை முன்மொழிந்தனர். குழுப்படுத்தல் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
-
செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
-
தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.