பழமொழிகள்
Appearance
- இக்கட்டுரை பழமொழிகள் குறித்து பிரபலங்களின் கருத்துகளைப் பற்றியது. தமிழ்ப் பழமொழிகள் என்பது குறித்து அறிய, தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் என்னும் கட்டுரையை பார்க்கவும்
பழமொழிகள் என்பது ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- பழமொழியைப்போல் மனத்தில் பாய்ந்து பதியக்கூடியது வேறு எதுவும் இல்லை. - முர்ரே[1]
- மணலில் முத்துகளைப் போலவும், சுரங்கத்தில் தங்கத்தைப் போலவும், சரித்திரத்தில் பழமொழிகள் இருக்கின்றன. - எராஸ்மஸ்[1]
- இந்த ஆச்சரியமான வாக்கியங்களுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு. பின்னால் தத்துவ ஞானிகள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். - புளுடார்க்[1]
- அனுபவம் விஞ்ஞானங்களுக்கு எல்லாம் தாய் பழமொழிகள் அந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்டவை. பழமொழிகளில் உண்மையாக இல்லாதவை மிகச் சிலவே இருக்கும். - செர்வான்டிஸ்[1]
- நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறுவாக்கியங்கள் பழமொழிகள். - செர்வான்டிஸ்[1]
- பழமொழி பலருடைய ஞானத்தைப் பெற்று ஒருவருடைய புத்தி நுட்பத்தால் அமைந்தது. - ஜே. ரஸ்ஸல்[1]
- அறிவு புகட்டும் ஒரு வாக்கியத்தையோ, சொற்றொடரையோ கேள்விப்பட்டால், அதை நினைவில் வைத்துக்கொள். - ஸர் ஹென்றி ஸிட்னி[1]
- எல்லா வகையிலும் உண்மையாயிருக்கும் பழமொழிகள் மிகச்சிலவே. - வாவனார்கூஸ்[1]
- பழமொழிகளை ஜோடி ஜோடியாக விற்க வேண்டும் என்று சொல்லுவது சரிதான். ஒற்றைப் பழமொழி பாதி உண்மையாகத் தான் இருக்கும். - டபுள்யூ மாத்யூஸ்[1]
- வியாபார உலகில் தங்க நாணயங்கள் எப்படியோ, அப்படிச் சிந்தனை உலகில் பழமொழிகள் இரண்டும் அளவில் சிறியவை. எல்லா மக்களிடத்தும் புழக்கத்தில் உள்ளவை. - டி. மார்ச்[1]
- ஏடு, எழுத்தின் வரம்பைக்கூடத் தாண்டி, வாய்மொழியாகவே வழிவழியாக இறங்கும் தலைமுறையின் ஊட்டம். - லா. ச. ராமாமிருதம் (பாற்கடல் பக்கம் 117)