உள்ளடக்கத்துக்குச் செல்

ஐப்போபுரோமசு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐப்போபுரோமசு அமிலம்
Space-filling model of hypobromous acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐதரோபுரோமிக் அமிலம், புரோமிக்(I) அமிலம்
இனங்காட்டிகள்
13517-11-8 N
ChEBI CHEBI:29249 Y
ChemSpider 75379 Y
InChI
  • InChI=1S/BrHO/c1-2/h2H Y
    Key: CUILPNURFADTPE-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/BrHO/c1-2/h2H
    Key: CUILPNURFADTPE-UHFFFAOYSA-N
  • InChI=1/BrHO/c1-2/h2H
    Key: CUILPNURFADTPE-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83547
  • OBr
பண்புகள்
HBrO
வாய்ப்பாட்டு எடை 96.911
அடர்த்தி 2.470 கி/செ.மீ
கொதிநிலை 20–25 °C (68–77 °F; 293–298 K)
காடித்தன்மை எண் (pKa) 8.65
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஐப்போபுரோமசு அமிலம் (Hypobromous acid) HOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மிகவும் வலிமை குறைந்தும் நிலைப்புத்தன்மையற்றும் உள்ள ஒர் அமிலமாக இது காணப்படுகிறது. புரோமிக்(I) அமிலம், புரோமனால் அல்லது ஐதராக்சிடோபுரோமின் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரைசலாக மட்டுமே கிடைக்கக்கூடிய இச்சேர்மம் மற்ற ஐப்போ ஆலைடுகள் போலவே இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகளைக் கொண்டிருக்கிறது. இவ்வமிலத்தின் உப்புகளும் நிலைப்புத்தன்மை இல்லாமலேயே உள்ளன.

தயாரிப்பு மற்றும் பண்புகள்

[தொகு]

தண்ணீருடன் புரோமினைச் சேர்க்கும் போது விகிதச்சிதைவு முறையில் ஐப்போபுரோமசு அமிலமும் ஐதரோபுரோமிக் அமிலமும் உருவாகின்றன.

Br2 + H2O HOBr + HBr

ஐப்போபுரோமசு அமிலம் 8.65 அளவை காடித்தன்மை எண்ணாகப் (pKa = 8.65) பெற்றுள்ளது. எனவே காடித்தன்மை சுட்டெண் 7 (pH 7) அளவுள்ள நீரில் மட்டுமே இது பகுதியாகப் பிரிகையடைகிறது. அமிலத்தைப் போலவே ஐப்போபுரோமைட்டு உப்புகளும் நிலைப்புத் தன்மையில்லாமல் உள்ளன. மெதுவாக இவை விகிதச் சிதைவுக்கு உள்ளாகி தொடர்புடைய புரோமேட்டு மற்றும் புரோமைட்டுகளாக சிதைகின்றன.

3BrO−(aq) → 2Br−(aq) + BrO−3(நீர்க்கரைசல்)

பயன்கள்

[தொகு]

பல நோய்க்காரணி செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதால் வெளுப்பாக்கி, ஆக்சிசனேற்றி, நாற்றம் நீக்கி, நச்சுக் கொல்லி என்று பல்வேறு பயன்களை இச்சேர்மம் பெற்றுள்ளது.வெப்ப இரத்தப் பிராணிகளில் உள்ள ஈசனோபில்களில் இவ்வமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. . ஈசனோபில் பெராக்சிடேசு என்ற நொதி புரோமினைப் பயன்படுத்தி[1] ஐப்போபுரோமசு அமிலத்தை உருவாக்குகிறது. சூடான தொட்டிகளிலும் நீரூற்றுகளிலும் புரோமைடும் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஆக்சிசனேற்றும் முகவரின் உதவியால் ஈசனோபில்களிலுள்ள பெராக்சிடேசு போலச் செயல்பட்டு ஐப்போபுரோமைட்டை இது உருவாக்குகிறது.

ஓரின வேதிப்பொருளான ஐப்போகுளோரசு அமிலத்துடன் சேர்த்துப் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]