உள்ளடக்கத்துக்குச் செல்

மகளிர் புற்றுநோயியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் புற்றுநோயியல் (Gynecologic oncology) என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகளை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவத் துறையாகும். சூல்பைப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், யோனி புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருவாய் புற்றுநோய் போன்றவை இத்துறையில் ஆராயப்படும் புற்றுநோய் வகைகள் ஆகும். இத்தகைய புற்றுநோய்களைக் கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் இத்துறை வல்லுநர்கள் விரிவான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றிருப்பர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்டுதோறும் 82,000 பெண்கள் மகளிர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்[1]. 2013 ஆம் ஆண்டில் மட்டும் 91,730 பேர் இப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள் என கண்டறியப்பட்டது.[2] [3]. மகளிர் மருத்துவ புற்றுநோயியல் சங்கம் மற்றும் ஐரோப்பிய மகளிர் மருத்துவப் புற்றுநோயியல் சங்கம் போன்ற அமைப்புகள் மகளிர் புற்றுநோயாளிகளுக்கான தொழில்முறை அமைப்புகளாகும். மகளிர் புற்றுநோயியல் குழுவில் மகளிர் புற்றுநோயியல் நிபுணர்களும், மகளிர் புற்றுநோய்களைக் கையாளும் பிற மருத்துவ நிபுணர்களும் அடங்கியிருப்பர். மகளிர் புற்றுநோய்க்கான அறக்கட்டளை என்பது அமெரிக்காவின் மிகமுக்கியமான ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு புற்று நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியை வழங்குகிறது. மேலும் மகளிர் புற்றுநோய்களைப் பற்றிய கல்வித் திட்டங்களையும் அதற்கு தேவையானப் இதரபொருட்களையும் வழங்குகிறது.

மகளிர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரமான புற்றுநோய் மையங்களில் பெறுகின்ற சிகிச்சையைக்காட்டிலும் இத்தகைய சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதை நிருபிக்க குறைந்த அளவு சான்றுகளே உள்ளன [4]. 9000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பெண்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆய்வுகளின் முடிவு சிறப்பு மகளிர் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் பொது அல்லது சமூக மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை நீடிக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது. மேலும் 50000 பெண்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் சமூகம் அல்லது பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது கற்பித்தல் மையங்கள் அல்லது சிறப்பு புற்றுநோய் மையங்களில் சிகிச்சைப் பெற்ற பெண்களின் வாழ்க்கை நீடித்துள்ளதாக கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gynecologic Cancer". Mount Sinai Hospital.
  2. "Gynecologic Cancer". Mount Sinai Hospital.
  3. "About Gynecologic Cancers". Foundation for Women's Cancer. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
  4. "Centralisation of services for gynaecological cancer". The Cochrane Database of Systematic Reviews (3): CD007945. March 2012. doi:10.1002/14651858.cd007945.pub2. பப்மெட்:22419327. பப்மெட் சென்ட்ரல்:4020155. https://doi.org/10.1002/14651858.CD007945.pub2. 

புற இணைப்புகள்

[தொகு]