உள்ளடக்கத்துக்குச் செல்

ஹொங்கொங் வட மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் வட மாவட்டம்
Hong Kong North District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr SO Sai-chi, BBS, MH)
பரப்பளவு
 • மொத்தம்168 km2 (65 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்2,80,730
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்ஹொங்கொங் வட மாவட்டம்

ஹொங்கொங் வட மாவட்டம் (North District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கின் புதிய நகர உருவாக்கங்களில் ஒன்றான பன்லிங் செங் சுயி புதிய நகரம் இம்மாவட்டத்திலேயே உள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பீட்டுன் படி 280,730 ஆகும். குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டம் இரண்டாவது ஆகக்குறைந்த தொகையினர் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டம் 168 கிலோ மீட்டர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. அத்துடன் இம்மாவட்டம் மேற்கு கடல் பரப்பில் பல தீவுகளையும் கொண்டுள்ளது.

சிறப்பு

[தொகு]
லோ வூ முனைத்திருத்தப் பணியகம்

இந்த மாவட்டம் சீனப் பெருநிலப்பரப்பின் செஞ்சேன் நகரத்தையும் சம்ச்சுன் ஆற்றையும் வடக்கில் எல்லையாகக் கொண்டுள்ளது. அத்துடன் ஹொங்கொங் மற்றும் சீனாவுக்கான எல்லையையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. சீனாவுக்கு போவோர் அல்லது சீனாவில் இருந்து ஹொங்கொங் வருவோர் குடிவரவு திணைக்களத்தின் நுழைமதி (வீசா) பெறும் இடம் இம்மாவட்டத்தின் வட எல்லையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

புள்ளிவிபரக் கணிப்பின் படி இம்மாவட்டத்தின் 70% வீதமான மக்கள் புதிய நகர் உருவாக்கமான பன்லிங் செங் சுயி புதிய நகரம் பகுதியிலேயே வசிக்கின்றனர். அதன் அன்மித்த நகரங்களான சா டவ் கொக் மற்றும் டா க்வு லிங் ஆகிய நகரங்களையும் மற்றும் இரண்டு நாட்டுப்புற சிறு நகரங்களையும் உள்ளடக்கியப் பகுதியில் கிட்டத்தட்ட 40,000 கிராம மக்கள் வசிக்கின்றனர்.

பெருமளவு நிலப்பரப்பு தேசிய வனங்களாகவே உள்ளது.

பிரதான நகரங்கள்

[தொகு]

இம்மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:

போக்குவரத்து

[தொகு]

இந்த வட மாவட்டத்தில் எம்டிஆர் கிழக்கு தொடருந்து வழிக்கோடு உள்ளது. மற்றும் பன்லிங் அதிவிரைவுப் பாதை, சன் டின் அதிவேகப் பாதை, சா டவ் கொக் பாதை போன்ற பாதைகளும் இம்மாவட்டத்தின் ஊடாக போகிறது.

எம்டிஆர் தொடருந்தகங்கள்

[தொகு]

சீன எல்லைகள்

[தொகு]
ஒங்கொங்:விக்கிவாசல்

தீவுகள்

[தொகு]
அப் சாவ் தீவு

இம்மாவட்டத்தில் உள்ள தீவுகள்:

வெளியிணைப்புகள்

[தொகு]